’இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...’ - போலீசாருக்கு சூர்யா செய்த சிங்கம் ஸ்டைல் உதவி
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 30, 2019 05:07 PM
காப்பான் படத்துகுப் பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கும் ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அவர் சூரியை வைத்து இயக்கிவரும் திரைப்படம் முடிவடைந்ததும் தொடங்க உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்புடன் ’அகரம்’ என்ற நிறுவனம் மூலம் வசதியில்லாதவர்களுக்கு கல்வி மற்றும் இதர உதவிகளை செய்து வருகிறார். இந்த வரிசையில் தமிழக காவல் துறைக்கு 2 லட்சம் மதிப்புள்ள 50 சிசிடிவி கேமராக்களை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் வழங்கினார்.
இந்த கேமராக்கள் நகரின் 3 முக்கிய பகுதிகளை கண்காணிக்க பொருத்தப்பட உள்ளது.