''தளபதி கூட செகண்ட் படம்... 'கைதி' பாய்ஸ் to 'தளபதி 64' பாய்ஸ்'' - பிரபல நடிகர் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தளபதி 64' பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து Thalapathy64FirstLook என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Actor Lallu tweets about Kaithi, Vijay Thalapathy 64, and Director Lokesh Kanagaraj

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சாந்தனு,  ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, கௌரி கிஷன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் லல்லு தனது ட்விட்டர் பக்கத்தில், ''லோகேஷ் கனகராஜ் அண்ணா பட செட்டில் இருந்து வருகிறேன். உங்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது. என்னுடைய தளபதி விஜய் கூட இரண்டாவது படம். இப்பொழுதும் இது கனவு போலவே இருக்கிறது. கைதி பாய்ஸ் டு தளபதி 64 பாய்ஸ்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor