ஜெயலலிதா கதையில் நடிக்கும் ஹீரோயின் இப்படி ஒரு விஷயத்தை சத்தமில்லாம செஞ்சுட்டாங்களே.!!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை கங்கனா ரனாவத் ஃபெப்சி அமைப்புக்கு அவரால் முடிந்த உதவியை செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் திரைப்படம் தலைவி. ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தலைவி படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் கொரோனா வைரஸ் நிவாரணமாக நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த ஃபெப்சி அமைப்புக்கு அவர் 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தலைவி படத்தில் பணிபுரிந்த தின வருமான தொழிலார்களுக்கும் அவர் 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். கங்கனா ரனாவத்தின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது.
Tags : Kangana Ranaut, Thalaivi, Corona relief fund