கொரோனா நிதி : நடிகர் விஜய் இன்னும் 'அந்த' நன்றியை மறக்கவில்லை - புதுச்சேரி முதல்வர் புகழாரம்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்துக்கும், நடிப்புக்கும் பல கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர். நடிகர் விஜய் மொத்தம் 1.30 கோடியை கொரோனா நிதியாக வழங்கியுள்ளார். அதிலும் அவர் தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் புதுச்சேரி பகுதிக்கும் லட்சக்கணக்கில் நிதி வழங்கினார்.
இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தளபதி விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் "புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் இருக்கிறது. எனவே பல நடிகர்களும் தங்கள் படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்துகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நம் அரசு செய்கின்றது. இதனை மறக்காத விஜய் நமக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி. அந்த பணத்தை மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். மற்ற நடிகர்களும் அவரை போல முன்வந்து புதுச்சேரிக்கு உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.