அட..! ஊரடங்கு நேரத்துல ஒரு படத்தையே எடுத்துட்டாங்களே.! - மிரட்டலான ஸ்னீக் பீக் வெளியானது.
முகப்பு > சினிமா செய்திகள்ஊரடங்கு நேரத்தில் உருவான முதல் திரைப்படமான க்யூ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனிடையே ஊரடங்கு நேரத்தில் முழு படத்தையும் எடுத்து முடித்து இருக்கிறார்கள்.
பயமறியா பிரம்மை என்கிற படத்தை இயக்கியுள்ளவர் ராகுல் கபாலி. இத்திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதனிடையே இந்த ஊரடங்கு நேரத்தில் அவர் தனது அடுத்த படமான 'க்யூ' என்கிற திரைப்படத்தை இயக்குவதில் இறங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் குரு சோமசுந்திரம், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு நடிகரும் தங்கள் வீட்டில் இருந்து ஐ ஃபோனில் படம்பிடித்துள்ளனர். இதை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் வாட்சப் மற்றும் ஃபோன் கால் மூலம் ஒருங்கிணைத்துள்ளனர். 120 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் 4 கதைகளை கொண்டு உருவாகியுள்ளது. மேலும் டிஜிட்டல் ப்ளாட்ஃபார்மில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கே இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் 4 ராப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காணாமல் போன ஒரு குடும்பத்தை, வீட்டில் இருந்தபடியே தனது அசிஸ்டன்ட்களை வைத்து கண்டுபிடிக்கும் டிடக்ட்டீவ். இவர்களுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இப்படத்தின் கருவாகும்.
ட்ரீட்மென்ட் வீடியோவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்னீக் பீக், கிடைக்கும் லைட்டிங் வசதியுடன், ஐ ஃபோனில் எடுக்கப்பட்டுருப்பினும், நல்ல தரத்தில் சினிமாவை எடுக்க முடியும் என மக்களுக்கு காட்டுவது போல் அமைந்துள்ளது.
மேலும் அறிமுக நடிகர்களான ஜே.டி, மதுசூதனன், தர்ஷன் பாஸ்கர் உள்ளிட்ட புதுமுக நடிகர்கள் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளனர். மேலும் பல நடிகர்களுக்கு படக்குழு சார்பில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள நடிகர்கள் 69mmfilm@gmail.com என்ற மெயில் ஐடியை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட..! ஊரடங்கு நேரத்துல ஒரு படத்தையே எடுத்துட்டாங்களே.! - மிரட்டலான ஸ்னீக் பீக் வெளியானது. வீடியோ