தல அஜித்தின் 'வலிமை' தயாரிப்பாளர் எடுத்த முக்கிய முடிவு - கொரோனா காரணமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு தல அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கி வரும் இந்த படத்தை பேவியூ புரொடக்ஷன்ஸ் சார்பாக போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உலகமே கொரோனா வைரஸிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் போது பேய்வியூ (Bayview) புராஜெக்ட்ஸ் சார்பாக  தயாரிக்கும் படங்களின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ஒரு முடிவெடுத்துள்ளோம்.

அதன் படி  கொரோனா பிரச்சனைகள் முடியும் வரை எங்கள் படங்கள் பற்றிய அறிவிப்பு, விளம்பரம் எதுவும் வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். அதுவரை கொரோனாவிற்கு எதிரான போரில் ஒன்றிணைவோம். என்று தெரிவித்துள்ளார்.  தற்போது போனி கபூரின் பேய்வியூ புரொஜெக்ட்ஸ் சார்பாக தல அஜித்தின் வலிமை, அஜய் தேவ்கன் நடிப்பில் மைதான் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.

Entertainment sub editor