"பிரபாகரன் ஜோக்கை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்" - நடிகர் துல்கர் மன்னிப்பு விளக்கம்...!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு புரளி வைரலாகி வருகிறது. அதாவது மலையாள சினிமாக்களில் தமிழர்களை கொச்சைப்படுத்துவதாக கூறப்பட்டது. இதற்கு காரணம் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த 'வரனே அவசியமுண்டு' படத்தில் போராளி பிரபாகரன் பெயரை பயன்படுத்தியதுதான். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வண்ணம் நடிகர் துல்கர் சல்மான் ஒரு பதிவு இட்டுள்ளார்
அதில் அவர் "நிறைய மக்கள் பிரபாகரன் ஜோக்கை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அது வேண்டும் என்று பயன்படுத்தப் பட்டது அல்ல. இது பழைய மலையாள படமான பட்டன பிரவேஷம் என்ற படத்தை சார்ந்து எடுக்கப்பட்ட ஜோக். மேலும் இது கேரளாவில் மிகவும் வழக்கமான ஒரு தொடர். எனவே யாரையும் காயப்படுத்தும் நோக்கில் இது எடுக்கப்பட்டது இல்லை. பலரும் படத்தைப் பார்க்காமலேயே தவறாக கணித்து வதந்தி பரப்பி வருகின்றனர். என்னையும் எனது இயக்குனரையும் காயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இது வேண்டுமென்று பயன்படுத்தப்பட்டது அல்ல. தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு காமெடி மட்டுமே" என்று கூறியுள்ளார்.
இதற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் பிரசன்னா இதுபற்றி "ஒரு தமிழனாக பல மலையாளப் படங்களை பார்த்த என்னால் இதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தேவையில்லாத வெறுப்பு பேச்சுகளுக்காக துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து கேரளா தமிழ் சினிமா ரசிகர்களிடம் மீண்டும் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.
As a Tamil who's seen Malayalam movies I quiet understand the context, I sincerely apologize dear @dulQuer for the misunderstanding and all the unwarranted abuse. I see the name is used just like the line "ormayundo ee mukham" by Sureshgopi sir.
— Prasanna (@Prasanna_actor) April 26, 2020