ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி உருவாகும் ’தலைவி’ படத்துக்காக எம்.ஜி.ஆராக மாறிய அரவிந்த் சாமி!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி இயக்குநர் விஜய் ’தலைவி’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர். இந்த படத்தை விஷ்ணு இந்தூரி, சாய்லிஷ் சிங் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஃபோட்டோ இரண்டு வெளியாகி உள்ளது. இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு படத்தின் புதிய டீசர் ஒன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Here is my first look as Puratchi Thaliavar, Makkal Thilagam MGR in #Thalaivi . A teaser follows at 10.30 am today. Hope u like it 🙏 pic.twitter.com/LjnN6Ybwrw
— arvind swami (@thearvindswami) January 17, 2020
Tags : Kangana Ranaut, Arvind Swami, Thalaivi