www.garudabazaar.com

39 வயதில் மாராடைப்பால் மரணம் அடைந்த நடிகர் .. அண்ணன் மகனின் இறப்பால் கதறி அழுத பாலையா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு நடிகர் தாரக ரத்னா, 39 வயதிலேயே கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 18) இரவு காலமானார்.

Telugu Actor Taraka Ratna Funeral Bala Krishna Emotional

Images are subject to © copyright to their respective owners.

தாரக ரத்னா  இறுதிச்சடங்கு இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றது. கடந்த மாதம், ஜனவரி 27-ம் தேதி ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், தாரகின் சகோதரருமான நாரா லோகேஷின் மாநிலம் தழுவிய ‘பாதயாத்திரை’ தொடக்க விழாவில் பங்கேற்றபோது தாரக ரத்னா

மயங்கி விழுந்தார் என கூறப்படுகிறது.

பின்னர் அவர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த நடிகர் தாரக ரத்னா நேற்று முன்தினம் பிப்ரவரி 18 அன்று காலமானார்.

Telugu Actor Taraka Ratna Funeral Bala Krishna Emotional

Images are subject to © copyright to their respective owners.

தாரக ரத்னா உடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணா உட்பட பல நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.

Telugu Actor Taraka Ratna Funeral Bala Krishna Emotional

Images are subject to © copyright to their respective owners.

பால கிருஷ்ணாவின் அண்ணன் நந்தமுரி மோகன் கிருஷ்ணாவின் மகன் தான் தாரக ரத்னா. அண்ணன் மகனின் உடலை கண்டதும் பாலகிருஷ்ணா அழுத வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேர குழந்தைகளை பாலகிருஷ்ணா கட்டி அணைத்த காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன.

Telugu Actor Taraka Ratna Funeral Bala Krishna Emotional

Images are subject to © copyright to their respective owners.

தாரக ரத்னாவிற்கு  அலேக்யா ரெட்டி என்ற மனைவி உள்ளார்.  2012 இல் ஆடை வடிவமைப்பாளர் அலேக்யா ரெட்டியை  தாரக ரத்னா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தாரக ரத்னா நடிப்பில் ஒக்டோபர் நம்பர் குராடு, தாரக், யுவ ரத்னா, பத்ராத்ரி ராமுடு, அமராவதி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

தொடர்புடைய இணைப்புகள்

Telugu Actor Taraka Ratna Funeral Bala Krishna Emotional

People looking for online information on NBK, NTR, Telugu Actor Taraka Ratna will find this news story useful.