www.garudabazaar.com
iTechUS

"5 பேர்.. விரல் கூட படாதுனு சொன்ன ஷங்கர்".! 'BOYS'-க்கு பின் நடிகை புவனேஸ்வரியின் திரைவாழ்க்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90களில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்தவர் நடிகை புவனேஸ்வரி. இவர் பிஹைண்ட்வுட்ஸ் youtube தளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

Actress Bhuvaneswari Opens Up on Boys Controversy scene

இதில், புவனேஸ்வரி தம்முடைய திரைவாழ்க்கை கடந்து வந்த பாதை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

குறிப்பாக பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி கூறும்பொழுது, “பொதுவாகவே அனைவரும் திரைத்த்துறையில் வந்த பிறகுதான் சீரியலுக்கு வருவார்கள், நான் சீரியலுக்குதான் முதலில் வந்தேன். அதன் பிறகுதான் திரைத்துறைக்கு வாய்ப்பு கிடைத்தது.

Actress Bhuvaneswari Opens Up on Boys Controversy scene

எனக்கு கிடைத்த முதல் திரைப்படமே பாய்ஸ் தான். அதுவும் பெரிய திரைப்படம், பெரிய அறிமுகம். இரண்டு மூன்று சீரியல்கள் நடித்திருந்த எனக்கு சங்கர் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெரிய விஷயமாக இருந்தது அவரை பார்க்கும் போதே பிரம்மாண்டமாக இருந்தது.

Actress Bhuvaneswari Opens Up on Boys Controversy scene

அப்போது இது போன்ற ஒரு காட்சி என்று சொன்னார்கள். ஆனால் 5 காலேஜ் படிக்கும் வயது இருக்கும் இளைஞர்கள் எதார்த்தமாக எப்படி நடந்து கொள்வார்களோ அப்படித்தான் இந்த காட்சி இருக்கும், ஆனால் 5 பேரில் ஒருவரது விரல் கூட மேல படாது என்று ஷங்கர் சார் சொன்னார், பிறகு யோசிக்கவில்லை. நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் என்று கூறிவிட்டு அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தேன்.

அதன் பிறகு என்னுடைய லெவலே மாறிவிட்டது, தமிழில் பெரிதாக இல்லை என்றாலும் நான் தெலுங்கில் பிஸியாகி விட்டேன். பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தேன், தெலுங்கில் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கக்கூடிய வாய்ப்பு இந்த திரைப்படம் மூலமாக எனக்கு கிடைத்தது. அதுதான் தமிழில் பல ஆண்டுகள் நான் தோன்றாமல் இருந்ததற்கு காரணம்” என்று நடிகை புவனேஸ்வரி பேசினார்.

"5 பேர்.. விரல் கூட படாதுனு சொன்ன ஷங்கர்".! 'BOYS'-க்கு பின் நடிகை புவனேஸ்வரியின் திரைவாழ்க்கை..! வீடியோ

மேலும் செய்திகள்

Actress Bhuvaneswari Opens Up on Boys Controversy scene

People looking for online information on Bhuvaneshwari, Bhuvaneshwari actress, Bhuvaneshwari Interview will find this news story useful.