தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் தந்தை மரணம் - சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தின் தந்தை பரமேஸ்வர ராவ் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை 2.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் கடந்த 4 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவரது இறுதிச்சடங்கு ஹைதராபாத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சிரஞ்சீவி, கோபிசந்த், அல்லு அரவிந்த் உள்ளிட்ட தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவரது வீட்டுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் தெலுங்கில் 1991 ஆம் ஆண்டு People's Encounter படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோவாக 1995 ஆம் ஆண்டு வெளியான தாஜ் மஹால் இவருக்கு முதல் படமாகும். இவரது நடிப்பில் ஸ்வராபிக்ஷம், விரோதி, ராம ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.
Tags : Chiranjeevi, Srikanth, Parameswara Rao