www.garudabazaar.com

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை மறைவு.. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

telugu actor krishna passed away producers council press release

Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. நடிகை மீனாவின் உருக்கமான பதிவு.!

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கே அவருக்கு CPR செய்யப்பட்ட நிலையில் இருதய, நரம்பியல் மற்றும் அவசரநிலை வல்லுநர்கள் அடங்கிய பல்துறை மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

telugu actor krishna passed away producers council press release

80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார்.

கிருஷ்ணா நடிகர் மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1980-களில் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யானார். ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.

telugu actor krishna passed away producers council press release

அவரது மனைவியும் மகேஷ் பாபுவின் தாயுமான இந்திரா தேவி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார். இதனையடுத்து, அவருடைய தந்தை கிருஷ்ணாவும் தற்போது மரணம் அடைந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கிருஷ்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

telugu actor krishna passed away producers council press release

அதே போல பல சினிமா பிரபலங்கள் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்தும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன் மகேஷ் பாபுவுக்கும் ஆறுதல் கூறி அவரை தேற்றி வருகின்றனர்.

telugu actor krishna passed away producers council press release

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவையொட்டி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணாவின் மறைவின் காரணமாக நாளை முழுவதும் தெலுங்கு சினிமா பணிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதி சடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | தாய் இறந்த 48 நாளில் தந்தை மரணம்! சகோதரர் உட்பட ஒரே வருடத்தில் 3 இழப்புகள்..நொறுங்கிய மகேஷ் பாபு

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

telugu actor krishna passed away producers council press release

People looking for online information on Krishna Ghattamnaneni, Mahesh Babu, Mahesh Babu father, Mahesh Babu father Krishna Ghattamnaneni, Telugu actor krishna passed away will find this news story useful.