www.garudabazaar.com

பிரபல பாலிவுட் நடிகருக்கு முத்தம் கொடுத்த தமன்னா.. வைரலாகும் கோவா பார்ட்டி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா, பிரபல பாலிவுட் நடிகருடன் புத்தாண்டு  கொண்டாடிய பார்ட்டி வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Tammannah New Year Celebration With Actor Vijay Varma

Also Read | வாரிசு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தமிழகம் முழுவதும் ஒட்டப்படும் வைரல் போஸ்டர்ஸ்!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.

அண்மையில் பப்ளி பவுன்சர்  படத்திலும் தனி கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். இந்த 'பப்ளி பவுன்சர்' கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில்  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியானது.

Tammannah New Year Celebration With Actor Vijay Varma

மேலும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ படத்தில் தமன்னா நடித்திருந்தார். சஷாங்கா கோஷ் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக வெளியானது.‌

தெலுங்கில் குருதுண்டா சீதாக்களம் படத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது.  தமன்னா நடிப்பில்  தெலுங்கில் 'That Is Mahalakshmi' படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.

Tammannah New Year Celebration With Actor Vijay Varma

தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

தமன்னா தற்போது மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். நடிகர் திலிப் நடிக்கும் 147வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா பாட்டியா நடிக்கிறார். இந்த படத்தை அருண் கோபி இயக்க உள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

Tammannah New Year Celebration With Actor Vijay Varma

சமீபத்தில் நடிகை தமன்னா தனது 33 வது பிறந்தநாளை (டிசம்பர் 21) கொண்டாடினார். இந்நிலையில் கோவாவில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் இணைந்து பார்ட்டியில் பங்கு பெற்று விஜய் வர்மாவுக்கு தமன்னா முத்தம் கொடுத்த  வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

விஜய் வர்மா சமீபத்தில் ஆலியா பட் உடன் டார்லிங் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

Also Read | சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. பிரியா பவானி சங்கர் பகிர்ந்த தெறி அப்டேட்!

பிரபல பாலிவுட் நடிகருக்கு முத்தம் கொடுத்த தமன்னா.. வைரலாகும் கோவா பார்ட்டி வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Tammannah New Year Celebration With Actor Vijay Varma

People looking for online information on Tamannaah Bhatia, Tamannaah New Year Celebration, Vijay Varma will find this news story useful.