www.garudabazaar.com

“நான் பார்க்கும்போது இதான் போய்ட்டு இருந்தது” பிக்பாஸ் தமிழ் குறித்து சன்னி லியோன்.. Bigg Boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

Sunny leone seen fights in bigg boss 6 tamil

Also Read | "மைனா சொன்னத நம்பி".. விக்ரமன்கிட்ட ஆத்திசூடி கத்துகிட்ட அமுது.. Lastல பிக்பாஸ் வெச்ச ட்விஸ்ட்!!

இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேன்லில் ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

Sunny leone seen fights in bigg boss 6 tamil

குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து எங்கேயாவது ஒரு இடத்தில் வருத்தப்பட்டது உண்டா? என கேட்கப்பட்டபோது,  “இல்லை. இல்லை எப்போதும் இல்லை. உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்றேன். அந்த நேரத்தில் என் வாழ்க்கை லட்சியம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது தான். ஓரிரு நாட்களாவது பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதையே நான் விருபினேன். இந்திய அளவில் பிரபலமான டிவி சேனலில் அமெரிக்காவில் இருந்து வந்து சன்னி லியோன் பங்கேற்கிறார், அதுவும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தொழில்துறையில் பின்னணியில் இருந்து வந்து.... அதுதான் எனது மிகப்பெரிய தொடக்கமாக இருந்தது, இந்தியாவில், பாலிவுட் திரையுலகம்,  டிவி சேனலில் அடியெடுத்து வைப்பது பெரிதாக இருந்தது. அது தான் எனது லட்சிமாக இருந்தது. பாருங்கள்.. இப்போது நான் உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன்.” என்று பேசினார்.

Sunny leone seen fights in bigg boss 6 tamil

தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்கப்பட்டபோது பேசிய சன்னி லியோன், “சில விஷயங்கள் பார்த்துள்ளேன். சின்ன சின்ன காட்சிகள் பாத்துருக்கேன். சில போட்டியாளர்கள் சண்டை போட்ட காட்சிகள் அவை. ஆனால் அந்த சண்டை யார் யாருடன் போடுறாங்கனு என எனக்கு தெரியாது. எப்போதும் போல சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.” என குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் பேசும் முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.

Also Read | PS2: பொன்னியின் செல்வன் - 2 படத்திற்காக முழுவீச்சில் களமிறங்கிய பிரபல நடிகர்.. வைரல் போட்டோ

“நான் பார்க்கும்போது இதான் போய்ட்டு இருந்தது” பிக்பாஸ் தமிழ் குறித்து சன்னி லியோன்.. BIGG BOSS 6 வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone seen fights in bigg boss 6 tamil

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Sunny Leone will find this news story useful.