Sinam D Logo Top
www.garudabazaar.com

பிரபல OTT-யில் ரிலீஸாகும் புதிய படத்துக்கு கைத்தறி Graffiti உடையில் தமன்னா போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா, தனது நடிப்பில் OTT-யில் ரிலீஸாகும் புதிய படத்துக்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tamannaah Bhatia PlanA PlanB Movie Latest Graffiti Photoshoot

Also Read | சந்திரமுகி-2 படத்திற்காக களமிறங்கிய ராகவா லாரன்ஸ்.. புதிய தோற்றத்தில் வைரலாகும் PHOTOS!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.

தமன்னா நடிப்பில் இந்தியில் நவாசுதீன் சித்திக் உடன் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

Tamannaah Bhatia PlanA PlanB Movie Latest Graffiti Photoshoot

தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

மேலும் பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கதையாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tamannaah Bhatia PlanA PlanB Movie Latest Graffiti Photoshoot

இந்த 'பப்ளி பவுன்சர்' திரைப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில்  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் நேரடியாக வெளியாக உள்ளது.

அடுத்ததாக  நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் தமன்னா நடித்து முடித்துள்ளார். 

Tamannaah Bhatia PlanA PlanB Movie Latest Graffiti Photoshoot

சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகி உள்ளது.  இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.‌

இந்நிலையில் இந்த படத்தினை பிரபலப்படுத்த நடிகை தமன்னா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். HUEMN கைத்தறி கிராஃபிட்டி உடையில் நவநாகரீக தோற்றத்தில் தமன்னா பாட்டியா இந்த போட்டோ ஷூட்டில் தோன்றியுள்ளார். பிரபல போட்டோகிராபர் அஜய் கடம் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

 

Also Read | 'நானே வருவேன்' படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போ? புதிய போஸ்டரில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia PlanA PlanB Movie Latest Graffiti Photoshoot

People looking for online information on PlanA PlanB Movie, Tamannaah Bhatia, Tamannaah Bhatia Latest Photoshoot will find this news story useful.