Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

நடிகர் அஜித்தின் 'ஆரம்பம்' & 'துணிவு' லுக்.. வைரலாகும் விக்னேஷ் சிவன் பகிர்ந்த PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஆரம்பம் படத்தின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Vignesh Shivan Shared Ajithkumar Arrambam Thunivu Look Photo

Also Read | "இசைப்புயல் Music ஸ்கூல் பொண்ணுன்னா சும்மாவா?" - மெய்சிலிர்த்த AR Rahman.. Vibe வீடியோ!!

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

Vignesh Shivan Shared Ajithkumar Arrambam Thunivu Look Photo

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில்  துவங்கி உள்ளது. இதற்காக படக்குழுவினர் சமீபத்தில் பேங்காக் நகருக்கு விமானம் மூலம் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

Vignesh Shivan Shared Ajithkumar Arrambam Thunivu Look Photo

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித் கைதாகும் போது கைது செய்தவரை பார்க்கும் லுக்குடன், விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை Reel & Real என ஒப்பிட்டு பதிவை பகிர்ந்துள்ளார்.  

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Vignesh Shivan Shared Ajithkumar Arrambam Thunivu Look Photo

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | நடிகர் 'KGF' யாஷ் தாடியை இழுத்து விளையாடிய குழந்தை.. ரசிகர்களை கவரும் சூப்பர் CUTE வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Ajithkumar Arrambam Thunivu Look Photo

People looking for online information on Ajith Kumar, Arrambam Thunivu Look Photo, Vignesh shivan will find this news story useful.