திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 10, 2019 11:24 AM
தமிழ் திரைப்படங்கள் மற்றும் எண்ணற்ற ஆவணப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பரவலாக அறியப்படுபவர் அருண்மொழி. இவர் ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்' படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இவர் 'காணிநிலம்', நாசர் ஹீரோவாக நடித்த 'ஏர்முனை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், தமிழ் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது இவரது பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் இவர் 'நிலமோசடி', இளையராஜாவை பற்றி 'இசைவானில் இன்னொன்று..', திருநங்கைகள் பற்றி 'மூன்றாவது இனம்', 'Beware of Commissions' உள்ளிட்ட ஆவனப்படங்களை இயக்கியுள்ளார். 49 வயதாகும் அருண்மொழி ஜப்பானிய திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானிய திரைப்படத்தை பார்த்து முடித்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
Tags : Arun Mozhi, Documentary, Director