'பிகில்' விழாவில் விஜே ரம்யாவிடம் விஜய் பேசும் வீடியோ மூலம் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

Fans wishes to Vj Ramya for Thalapathy 64 in Vijay Style

இந்த விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜே ரம்யா நடிப்பதாக அறிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரம்யாவை பார்த்து, சந்தோஷமா? என்று கேட்கும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.