ENPT பாடல் வரிகளையே தலைப்பாக்கிய Mr.X பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 09, 2019 11:35 AM
கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இசையமைப்பாளரும் Mr.X பிரபலமுமான தர்புகா சிவா இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த தர்புகா சிவா தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் வெளியாகி செம வைரலான நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் சர்ப்ரைஸாக வைத்திருந்தது.
மேலும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இசையமைப்பாளர் Mr.X யார் என ரசிகர்களின் ஆர்வதை தூண்டும் வகையில் புரொமோஷன்கள் செய்யப்பட்ட பின், தர்புகா சிவா தான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’, ‘பலே வெள்ளைய தேவா’ ஆகிய திரைப்படங்களுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் மற்றும் தீபா ஐயர் இணைந்து தயாரிதுள்ள இந்த படத்திற்கு இசையமைத்து தர்புக சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Really happy to announce the title of our film ‘Mudhal Nee Mudivum Nee’#MNMN#MudhalNeeMudivumNee@MNMN_TheFilm @SonyMusicSouth @supertalkies pic.twitter.com/mcEbkJ6hyi
— Darbuka Siva (@DarbukaSiva) November 8, 2019