www.garudabazaar.com

பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு.. தமிழக விநியோக உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்.. Official அறிவிப்பு.. Varisu

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

Varisu TN theatrical distribution bagged by 7screenstudio

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜூ & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளதும், இந்த படத்தின் UK தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றி விநியோகம் செய்யப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் பரவலாக இருந்தது. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு விடைகிடைப்பதுபோல், தற்போது விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமத்தை பல முன்னணி திரைப்படங்களை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனிடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய் தமது ரசிகர்களை இன்று பனையூரில் உள்ள அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத் தலைமை அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

Also Read | 5 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுடன் சந்திப்பு.. மாஸ் எண்ட்ரி கொடுத்த தளபதி விஜய்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Varisu TN theatrical distribution bagged by 7screenstudio

People looking for online information on Varisu, Varisu 2022, Varisu TN theatrical distribution, VarisuPongal, Vijay will find this news story useful.