www.garudabazaar.com

2 முறை இறப்பில் இருந்து மீண்ட 24 வயது இளம் நடிகை... மாரடைப்பால் பலியான சோகம்..! Aindrila Sharma

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Actress Aindrila Sharma passes away at the age of 24

24 வயதான பிரபல பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா, இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த 20 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை தொடர்ந்து CPR கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது,

இந்நிலையில் நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்துள்ள இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது., அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். முன்னதாக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரிலா சர்மாவுக்கு மூளைக்குள் இரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்பட்டது.

இதனால் பக்கவாதம் ஏற்பட்டதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில்தான் 24 வயதில் நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்

Actress Aindrila Sharma passes away at the age of 24

People looking for online information on Aindrila Sharma Death will find this news story useful.