''என்னடா கொரோனாவ அடிச்சே வெரட்டுறீங்க... இந்தியாவ நினச்சா..'' - 'மாஸ்டர்' பிரபலம் தடாலடி
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல் உள்ளது. மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம், கை, முகங்களை சோப் உபயோகித்து நன்றாக கழுவுங்கள் என்று அரசும் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 23) மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 'மேயாதமான்', 'ஆடை' படங்களின் இயக்குநரும் 'மாஸ்டர்' பட வசனகர்த்தாக்களில் ஒருவருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''ஒருவர் கொரோனாவை விரட்டுவதாக எண்ணி கட்டையால் பல்வேறு பகுதிகளை அடிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த அவர், போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது.☹️ #COVIDIOTS #COVID19outbreak #LockdownNow #SocialDistance #கொரோனா pic.twitter.com/1SHYdfma97
— Rathna kumar (@MrRathna) March 23, 2020