இந்த குட்டிப்பொண்ணு யார்னு தெரியுதா ? தமிழ், ஹிந்தியில் முன்னணி ஹீரோயின் இவங்க , Guess பண்ணுங்க !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கில் பிரபலங்கள் தங்கள் சிறுவயது ஃபோட்டோ பகிர்ந்து வருவது டிரெண்டாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை டாப்ஸி தனது அம்மா தங்கையுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.

Taapsee Shares her Childhood Pic with mother goes Viral | சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோயின்

இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஃபோட்டோவில் தனது அம்மாவின் மைன்ட் வாய் இப்படி இருக்கும் என்று தெரிவித்த அவர், இவங்க ரெண்டு பேரையும் ஒரே ஃபிரேமில் கொண்டு வந்த எனக்கு யாராவது அவார்டு கொடுங்க என்று தெரிவித்துள்ளார்.

டாப்ஸி நடிப்பில் தமிழில் கடந்த வருடம் வெளியான 'கேம் ஓவர்' விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. மேலும் அவரது நடிப்புக்கு பெரிதும் பாராட்டு கிடைத்தது. டாப்ஸி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்குகிறார்.

தமிழில் தல அஜித் நடித்து வெளியான 'நேர்கொண்டை பார்வை'யின் ஒரிஜினல் வெர்ஷனான 'பிங்க்' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஹிந்தியில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'தப்பட்' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

<

மேலும் செய்திகள்

Taapsee Shares her Childhood Pic with mother goes Viral | சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோயின்

People looking for online information on Taapsee Pannu will find this news story useful.