தல அஜித்தை கவர்ந்த அய்யப்பனும் கோஷியும்.! - மறைந்த சச்சி இயக்கத்தில் நடிக்க விரும்பினாரா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் மறைந்த இயக்குநர் சச்சியின் இயக்கத்தில் நடிக்க விரும்பினாரா என்பது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பினாரா அஜித்.?! | Clarification on ajith's wish to act in ayyappanum koshiyum d

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடித்த பில்லா, மங்காத்தா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் மலையாளத்தில் ப்ரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சச்சி அண்மையில் காலமானது திரையுலகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை பார்த்த நடிகர் அஜித், மறைந்த இயக்குநர் சச்சியை ஃபோனில் அழைத்து பாராட்டியதாகவும், மேலும் அவரின் இயக்கத்தில் நடிக்க விரும்பியதாகவும் சமூக வலைதளங்களில் கிசுக்கப்பட்டது.  அதற்கான கதையை அஜித்திடம் சொல்லும் முன், அவர் காலமாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. 

இதை தொடர்ந்து இதுகுறித்து நமது நெருங்கிய கோலிவுட் வட்டாரங்களிடம் விசாரித்த போது, ''அய்யப்பனும் கோஷியும் இயக்குநருடன் பணிபுரிய அஜித் விரும்பியதாக வரும் செய்திகள் யாவும் முற்றிலும் தவறானவை'' என மறுத்துள்ளனர். இதுபோன்ற எந்த விஷயமும் நடக்கவில்லை என திட்டவட்டமாக கூறுகின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். இதையடுத்து அஜித் மற்றும் மறைந்த இயக்குநர் சச்சி குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பினாரா அஜித்.?! | Clarification on ajith's wish to act in ayyappanum koshiyum d

People looking for online information on Ajith Kumar, Sachy will find this news story useful.