இந்த குட்டிப்பொண்ணு யார் தெரியுமா ? தமிழ், ஹிந்தியில் முன்னணி ஹீரோயின் இவங்க , Guess பண்ணுங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'ஆடுகளம்' படத்தின் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. அதனைத் தொடர்ந்து 'வந்தான் வென்றான்', தல அஜித்தின் 'ஆரம்பம்', 'காஞ்சனா 2' உள்ளிட்ட படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான கேம் ஓவர் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. மேலும் அவரது நடிப்புக்கு பெரிதும் பாராட்டு கிடைத்தது. டாப்ஸி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்குகிறார்.

தமிழில் தல அஜித் நடித்து வெளியான நேர்கொண்டை பார்வையின் ஒரிஜினல் வெர்ஷனான பிங்க் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஹிந்தியில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'தப்பட்' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அவர் தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், ''இந்த ஃபோட்டோவிற்கு பின் உள்ள கதை எனக்கு நியாபகம் இல்லை. என்னுள் இருக்கும் கொலையாளியின் உள்ளுணர்வை நியாபகம் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor