www.garudabazaar.com
iTechUS

சிம்பு பிறந்தநாளுக்கு A.R. ரஹ்மானின் ட்ரீட்.. 'பத்து தல' 1st சிங்கிள் 'நம்ம சத்தம்' ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Pathu Thala first single Namma Satham Song Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என் மாஸ்டருக்கு சல்யூட்".. பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு.. கமல்ஹாசன் உருக்கம்..!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Pathu Thala first single Namma Satham Song Released

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pathu Thala first single Namma Satham Song Released

Images are subject to © copyright to their respective owners.

இன்று பிப்‌.3 அன்று முன் காலை 12:07 மணிக்கு  பத்து தல படத்தின் 'நம்ம சத்தம்' எனும் முதல் சிங்கிள் பாடல்,  ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு

குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா கிடைக்குமா

ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா ஆற்றல் என்னைக்கும் அடங்குமா என்ற தொடக்க வரிகளை கொண்டு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து இந்த பாடலை பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடலை எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். கௌதம் கார்த்திக் &  சிம்புவின் நடன காட்சிகளும் ரஹ்மான் பாடும் காட்சிகளும் இந்த வீடியோவில் அமைந்துள்ளது.

Also Read | அஜித்குமாரின் 'துணிவு'.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட OTT- ரிலீஸ் எப்போ? எதுல? முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala first single Namma Satham Song Released

People looking for online information on AR Rahman, Namma Satham Song, Pathu Thala, Pathu Thala first single song, Silambarasan TR will find this news story useful.