ஒரே நாளில் ரிலீசா? சூர்யா படத்துடன் மோதும் ஜோதிகா-கார்த்தி படம்? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 31, 2019 10:07 AM
'பாபநாசம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடிக்கின்றனர். இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியீடு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சூரரை போற்று படமும் டிசம்பர் இருபதாம் தேதி வெளியீடு படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது.