Sweet Gesture இயக்குநர்கள் சங்கத்திற்கு தீபாவளி பரிசு தந்த சூர்யா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 10, 2019 04:43 PM
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்.27ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு தனது சார்பாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். இந்த காசோலையை இயக்குநர்கள் சங்க அறக்கட்டளை தலைவர் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயக்குமாரிடம் நடிகர் சூர்யா வழங்கினார்.
‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். சூர்யா நடிக்கும் 39வது திரைப்படமான ‘சூர்யா 39’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.