சூர்யாவின் லேட்டஸ்ட் படம் குறித்து அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இசை குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

GV Prakash update on Suriya's Love song in Soorarai Potru film

சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நடிகர் சூர்யா முடித்துள்ளார்.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேனரில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும்,  கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தில் இடம்பெறும் காதல் ராக் பாடல் ஒன்றை மிகவும் பிரபலமான ‘அகம்’ பேண்ட் இசைக்குழுவில் இருந்து ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் என்பவர் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த பாடல் படத்தில் மிக அழகாக இயக்குநர் சுதா கொங்கரா படமாக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.