www.garudabazaar.com

திடீரென 'தள்ளிப்போன' சூரரை போற்று... என்ன காரணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு முக்கிய இடமுண்டு. கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்க தாமதமானதால் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 30-ம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகாது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Suriya's 'Soorarai Pottru' release postponed, Details here!

இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சூரரை போற்று திரைப்படம் ஆரம்பிக்கும் போது சில சவால்கள் இருக்கும் என நினைத்தோம். இந்த படம் விமானப்படை பற்றியது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆகவே நாங்கள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி, அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது. இந்திய விமானப் படையின் விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது. தற்போது புதிதாகச் சில தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டியுள்ளது.

ஆனால், பெருந்தொற்று காலத்தில் தேசத்தின் முன்னுரிமை வெவ்வேறு விஷயங்களின் மீது குவிந்துள்ளதால் நாங்கள் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகிறது. சூரரைப் போற்று நம் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்திருக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதற்காக எவ்வளவு காத்திருந்தார்கள் என்பதுதான் எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதனை நல்லவிதமாக எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். விரைவிலேயே இந்தப் படத்தின் ட்ரைலரை வெளியிடுவோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

திடீரென 'தள்ளிப்போன' சூரரை போற்று... என்ன காரணம்? ரசிகர்கள் அதிர்ச்சி! வீடியோ

Tags : Suriya

தொடர்புடைய இணைப்புகள்

Suriya's 'Soorarai Pottru' release postponed, Details here!

People looking for online information on Suriya will find this news story useful.