www.garudabazaar.com

''இப்ப கூட சூர்யாதேவி என்னை ஃபாலோ பண்ணி அடிக்க வந்தா..'' - உண்மைகளை உடைக்கும் நாஞ்சில் விஜயன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாதேவி குறித்து நடிகர் நாஞ்சில் விஜயன் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார். 

நாஞ்சில் விஜயன் ஆக்ரோஷ பேட்டி | Nanjil Vijayan opens on recent issue over suriya devi

விஜய் டிவியில் காமெடி நடிகராக பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். கலக்கப் போவது யாரு, அது இது எது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து இவர் யூ-டியூபில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர், நாஞ்சில் விஜயனை சூர்யாதேவி என்பவர் ரவுடிகளை வைத்து அடித்ததாகவும், இதில் அவர் கடுமையாக காயமடைந்ததாகவும் வீடியோ வெளியிட்டார். 

நாஞ்சில் விஜயன் ஆக்ரோஷ பேட்டி | Nanjil Vijayan opens on recent issue over suriya devi

இந்நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் இவ்விவகாரம் குறித்து பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அப்போது அவர் பல கூறியதாவது, ''அன்று இரவு மூன்று ரவுடிகளுடன் என் வீட்டுக்குள் புகுந்து, என்னை அடித்து, ஆட்டோவில் ஏற்றி சென்று, நான் அரை நிர்வானமாக தப்பி ஓடி வந்தேன். இந்த காட்சிகள் எல்லாம் சிசிடிவி கேமராவில் ரெக்கார்ட் ஆகியுள்ளது. ஆனால், காவல்துறை தரப்பில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, பேச்சுவார்த்தை நடத்தி, அவளை மன்னிப்பு கேட்க வைக்கும் வேலைகள்தான் நடக்கிறது. சூர்யாதேவி முதலில் கைது செய்யப்பட வேண்டும். இதுபோன்ற ரவுடியிசங்களை அரசு அனுமதிக்ககூடாது'' என தெரிவித்தார். 

மேலும் சூர்யாதேவியின் பின்னால் பலம் பொருந்தியவர்கள் யாரோ இருப்பதாகவும், இப்போதும்கூட அவர் பயமின்றி, தன்னை பைக்கில் ஃபாலோ செய்து, அடிக்க வந்ததாகவும், தனது வீட்டை சிலர் நோட்டமிட்டு வருவதாகவும்'' நாஞ்சில் விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோ இதோ. 

 

''இப்ப கூட சூர்யாதேவி என்னை ஃபாலோ பண்ணி அடிக்க வந்தா..'' - உண்மைகளை உடைக்கும் நாஞ்சில் விஜயன். வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நாஞ்சில் விஜயன் ஆக்ரோஷ பேட்டி | Nanjil Vijayan opens on recent issue over suriya devi

People looking for online information on Nanjil Vijayan, Suriyadevi will find this news story useful.