ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல்ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பங்கேற்ற செல்வராகவன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். NGK குழுவினருடன் இணைந்து பணி புரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்
மேலும் ஆயிரத்தில் ஒருவன் ரி-ரிலீஸ் செய்தபோது ரசிகர்கள் தந்த வரவேற்பு தன்னை மிகவும் உற்சாக படுத்தியது என்றார். ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பற்றி கேட்டதற்கு செல்வராகவன் ஒரு படைப்பாளியின் வெற்றி என்பது ரசிகர்களின் கொண்டாட்டமே அவர்கள் என் படைப்பின் மீது கொண்ட காதலுக்காகவே ஆயிரத்தில் ஒருவன் 2 கண்டிப்பாக எடுக்கப்படும் என்றார்.
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த செல்வராகவன் அது நிகழ்ந்தால் எல்லாரையும் விட எனக்கு தான் அதிக மகிழ்ச்சியைத் தரும் இருந்தாலும் அவர்களின் முடிவை பொருத்தே அமையும் என்றார்.
சூர்யாவும் கார்த்தியும் ஆயிரத்தில் ஒருவன் 2வில் நடிப்பார்களா ? வீடியோ