செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படத்தின் அன்பே பேரன்பே பாடலின் டிராக் வெளியாகி உள்ளது.

டிரீம் வாரியர்ஸ்' எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், இணையத்தில் சக்கைபோடு போட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் 'அன்பே பேரன்பே' பாடல் வெளியானது.
சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல்ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். சூர்யாவுடன் செல்வராகவன் முதன்முறையாக கை கோர்த்திருக்கும் இப்படம், வரும் மே 31-ம் தேதி வெளியாகிறது.
யுவனின் 'அன்பே பேரன்பே' வீடியோ