ஜோதிகாவுக்கு குரல் கொடுத்த பிரபல பாடகி - சூர்யாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படப் பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்'ஜாக்பாட்', 'தம்பி' படங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படம் முதலில் மார்ச் 27 அப்போது திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவின் அச்சம் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்க, ஜேஜே ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு கோவிந்த வசந்தா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இருந்து சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார் பாடிய வா செல்லம் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வான் தூறல்கள் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. உமாதேவி எழுதியுள்ள இந்த பாடலை சின்மயி பாடியுள்ளார்.,
ஜோதிகாவுக்கு குரல் கொடுத்த பிரபல பாடகி - சூர்யாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படப் பாடல் இதோ வீடியோ