www.garudabazaar.com

"எதுனாலும் பிளான் பண்ணி பண்ணனும்" - Leak ஆன சுரேஷ் தாத்தாவின் தரமான பிளான் Bigg Boss Ultimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஸ்னி+ஹாட் ஸ்டார் தமிழ், 06 பிப்ரவரி 2022:- ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசனிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர்  பங்கேற்றுள்ளனர்.

Suresh Thatha master strategy leaked audio BiggBoss Ultimate

முந்தைய சீசன் போட்டியாளர்கள்

இவர்கள் முந்தைய சீசன்களில் விளையாடும்போது சில இடங்களில் பொறுமை காத்தவர்களாக இருந்தாலும், பல இடங்களில் அவர்களின் சண்டையும், சத்தமும் பிக்பாஸ் வீட்டையே கதிகலங்க வைத்தது. மேலும் கோபமும், கண்ணீரும் கடந்த சீசனில் இவர்கள் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருக்கிறது.

Also Read: வலிமை பார்ட் 2 வருதா? போனிகபூர் கொடுத்த சீக்ரெட் குறிப்பு... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

அப்படி பலரும் பல சீசனில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு என இந்த விளையாட்டு குறித்து தனி வியூகமே இருக்கும். அந்த வகையில் பங்கேற்று போட்டியாளர்கள் அனைவருக்கும் தனித்தனி strategy இருக்கும். ஒவ்வொரு சீசனிலும்  அவரவர்களுக்கான strategy பயன்படுத்தி விளையாடி வந்தனர்.

Suresh Thatha master strategy leaked audio BiggBoss Ultimate

தற்போது 5 சீசனும் முடிந்துள்ள நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மத்தியில் அவ்வப்போது சிறுசிறு அணுகுண்டு வெடித்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து அவ்வப்போது பல ஆடியோக்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சுரேஷ் தாத்தாவின் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சுரேஷ் தாத்தாவின் ஆடியோ

பிக்பாஸ் சுரேஷ் தாத்தாவை வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் "கொளுத்தி போடுவார்.. ஆனால் வீட்டை கலகலப்பாக வைத்திருப்பார்" என்று அவரை பற்றிய ஒரு அபிப்ராயம் உள்ள நிலையில்,  சுரேஷ் தாத்தா பேசுமாறு தற்போது ரிலீஸாகியுள்ள ஒரு ஆடியோ, "அப்படி என்ன  சொல்றாரு" என்ற யோசனையை தூண்டும் வகையில் உள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் மற்றவர்களை strategy king எனவும் யாராவது அழுதாலும், அது அவர்களது strategy என அடிக்கடி strategy என்ற ஒரு வார்த்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்து கொண்டிருக்கும்.

Suresh Thatha master strategy leaked audio BiggBoss Ultimate

அப்படி என்ன  சொல்றாரு?

இதற்கு ஏற்றது போல் சுரேஷ் தாத்தா பேசியுள்ளதாக டிஸ்னி+ஹாட் ஸ்டார் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள அந்த ஆடியோவில் இந்த strategy என்ற ஒரு வார்த்தை மேலோங்கி உள்ளது.

அதில், "உங்க stretegy என்ன என்று மக்களுக்கு ஒரு யூகம் வந்திருக்கும்" என்றும், "அதுவே உங்க மேல தப்பான ஒரு வியூகம் இருந்துச்சுன்னா, அது மற்ற கன்டஸ்டன்டுக்கு  பிளஸ் பாயிண்டா இருக்கும், உங்களுக்கு மைனஸ் ஆயிரும்", என்று சுரேஷ் தாத்தா கூறும் ஒரு ஆடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

இதன்மூலம் strategy என்பது பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவருக்கும் உள்ளது என்ற வகையில் தற்போது வெளியான அந்த ஆடியோவில்  தெளிவுப்படுகிறது.

Also Read: புதுவை முதல்வர் ரங்கசாமி - விஜய் சந்திப்பு.. வெளியான புகைப்படங்கள்.. பின்னணி இது தான்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Thatha master strategy leaked audio BiggBoss Ultimate

People looking for online information on Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Suresh Chakravarthy will find this news story useful.