www.garudabazaar.com

இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஆரி... குவியும் ஆதரவு... பாலாவை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் வாக்குவாதங்கள் முற்றி மோசமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆரம்பத்தில் ரியோ, பாலா  இருவருக்கும் சில சமயங்களில் வாக்குவாதம் முற்றி பிரச்சினைகள் வந்தது. ஆனால் நேற்றைய தினம் ரியோவுக்காக பேசுகிறேன் என்று பாலா ஆரியை போட்டு கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

biggboss Aari in india level trending in twitter இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஆரி

பின்பு ரம்யா, அர்ச்சனா, நிஷா, கேபி, அனிதா, சனம் போன்ற மற்ற போட்டியாளர்களும் அவருக்கு விரோதமாக எழும்பி நின்றனர். இந்நிலையில் ஆரி தனி ஆளாக நின்று போராடினார். வெளியே வந்த பிறகும்  பாலா மற்றவர்களிடம் அவரைப் பற்றி தவறாக பேசிக்கொண்டிருந்த போதும், ஆரம்பத்தில் பொறுமையாய் பேசிக்கொண்டிருந்தார். பின்பு பாலா தேவையில்லாத வார்த்தைகளை விட இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

பின்பு தனிமையில் இருந்த ஆரியின் கால்களில் பாலா விழுந்தார். எனினும் ஆரி இந்த சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து விட்டார். இந்த சம்பவம் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆதே போல் 'விட்டுகொடுத்தேன்' என்ற வார்த்தையை ஆரி பயன்படுத்தவே இல்லை என்று ரசிகர்கள் குறும்படமும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆரிக்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டு வர, அவர்  இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Aari, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

biggboss Aari in india level trending in twitter இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஆரி

People looking for online information on Aari, Balaji will find this news story useful.