சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' படத்துக்கு பிறகு, யோகி பாபு, சந்தானத்துடன் இணைந்து நடித்த 'டகால்டி' திரைப்படம் இன்று(31.01.2020) வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு, பார்கவி என்ற பெண்ணை பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து இந்த செய்தியில் உண்மையில்லை என எங்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் யோகி பாபு , கருணாகரனுடன் இணைந்து நடித்த 'பன்னிக்குட்டி' டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை 'கிருமி' பட இயக்குநர் அனுச்சரண் இயக்கியுள்ளார். கே இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திண்டுக்கல் லியோனி, கலக்கப்போவது யாரு ராமர், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.