‘பேரன்பு’ நடிகைக்கு ஆசிட் வீசுவதாக கொலை மிரட்டல் - வைரலாகும் ஃபேஸ்புக் லைவ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பேரன்பு’ திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை அஞ்சலி அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Transgender actress 'Preanbu' fame Anjali Ameer faces Acid attack threat

இவர் ஏற்கனவே சில மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாகவும், மாடலாகவும் இருக்கும் அஞ்சலி அமீர் கடந்த சில ஆண்டுகளாக ஆனஸ் விசி என்பவருடன் லிவ்விங் ரிலேஷனில் இருந்து வருகிறார்.

கோழிக்கோடை சேர்ந்த ஆனஸ் தன்னிடம் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டதால், அவருடன் வாழ பிடிக்காமல் அவரை விட்டு பிரிய அஞ்சலி அமீர் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், தன்னை விட்டு பிரிந்தால், ஆசிட் வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து நடிகை அஞ்சலி அமீர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவில் கண்ணீர் மல்க மக்களிடம் உதவி கோரியுள்ளார். இது தொடர்பாக போலீஸ் புகார் அளித்திருப்பதாக தெரிவித்த அவர், இறவனின் படைப்பில் திருநங்கையாக இருக்கும் தனக்கு பெற்றவர்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால், இதுபோன்றவர்களை நம்பி ஏமாறும் அவலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆனஸ் தன்னிடம் ரூ.4 லட்சம் வரை பண மோசடி செய்திருப்பதாகவும், அவரது தொடர் தொல்லை காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்திற்கு ஆளானதாவும், தனக்கு ஏதேனும் மோசமான சம்பவம் நேரும் என்றால் அதற்கு அவர் தான் காரணம் என்றும் அஞ்சலி அமீர் தெரிவித்துள்ளார். நடிகை அஞ்சலியின் இந்த ஃபேஸ்புக் லைவ் வாக்குமூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.