சூப்பர் ஸ்டாரின் தர்பாருடன் பொங்கல் ரேஸில் ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்துடன் பொங்கல் ரிலீஸில் பிரபல ஹீரோவின் இரண்டு திரைப்படங்கள் இணைந்துள்ளன.

With Darbar Sasikumar's MGR Magan and Raja Vamsam to be release on Pongal 2020

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ‘ராஜவம்சம்’ படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சசிக்குமார் நடித்துள்ள 19வது திடைப்படமான ‘ராஜவம்சம்’ படத்தில் ராதா ரவி ,தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி , யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. இதனிடையே, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சசிக்குமார் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படமும் ஜனவரி மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.