Maha others
Nadhi others
www.garudabazaar.com

தேசிய விருது வென்றதற்காக சூர்யாவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூர்யா மற்றும் தேசிய விருது வென்ற அனைவரையும் வாழ்த்தியுள்ளார்.

Superstar Rajinikanth tweet about National Film Awards Suriya

சிறந்த திரைப்படங்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள்  டெல்லியில் மத்திய அரசு சார்பில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

Superstar Rajinikanth tweet about National Film Awards Suriya

அறிமுக இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருந்த 'மண்டேலா' திரைப்படம், சிறந்த வசனம், சிறந்த அறிமுக இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.

வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் என மொத்தம் 3 தேசிய விருதுகளை, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்  வென்றுள்ளது.

Superstar Rajinikanth tweet about National Film Awards Suriya

இந்நிலையில் விருது வென்றவர்களை ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார், "தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்" என ட்வீட் செய்துள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth tweet about National Film Awards Suriya

People looking for online information on National awards, National Film Awards, Rajini kanth, Soorarai Potru, Suriya will find this news story useful.