Maha others
Nadhi others
www.garudabazaar.com

"விளையாடுறீங்களா சார்.? - ஃபஹத் பாசில்" .. "விக்ரம் பாத்துட்டீங்களா.? - லோகேஷ்" .. வைரல் Video Call

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்த திரைப்படம் விக்ரம். கமல்ஹாசனின் 80களில் புகழ்பெற்ற விக்ரம் திரைப்படத்தின் மறு பாகமாக உருவான விக்ரம் திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

Fahadh Faasil and Lokesh first video call after vikram release

திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் குவித்த விக்ரம் திரைப்படத்தின் பெரு வெற்றியை அடுத்து நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசளித்தார். இதே போல் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பலருக்கும் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் அளித்த நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவுக்கும் சிறப்பு பரிசாக ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை அளித்திருந்தார். இதேபோல் லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை பரிசாக அளித்து இருந்தார்.

Fahadh Faasil and Lokesh first video call after vikram release

இந்த திரைப்படத்தை ரசிகர்களும் ஏகபோகமாக கொண்டாடி வரும் நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் பிஹைண்ட்வுட்ஸின் பிரத்தியேக நேர்காணலில் இணைந்தார்.

இந்த நேர்காணலில் அவருடன் வீடியோ காலில் இணைந்தார் விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் பட ரிலீஸ்க்கு பிறகு முதல் முறையாக வீடியோ காலில் பேசிக்கொள்ளும் இவர்களின் பேச்சு மிகவும் கலகலப்பாக இருந்தது. மச்சி என்று பேசிக்கொண்ட இவர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

Fahadh Faasil and Lokesh first video call after vikram release

அப்போது ஃபஹத் பாசில் ,லோகேஷ் கனகராஜின் பின்னணியை பார்த்து, “என்ன விளையாண்டு கொண்டிருக்கிறீர்களா சார்.?” என்று கேட்கிறார். இதேபோல் லோகேஷ் கனகராஜ் ஃபஹத் பாசிலிடம், “விக்ரம் திரைப்படத்தை பார்த்தீர்களா..?” என்று கேட்கிறார்.

அதற்கு பதில் சொன்ன ஃபஹத் பாசில், “இல்லை சார்... உங்களுடன் கடைசியாக ரிலீஸ்க்கு முன்பாக பார்த்ததுதான்.. நிச்சயமாக நான் சென்னை வந்து உங்களுடன் சேர்ந்து பார்ப்பேன்!” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர்களின் பேச்சும் ஃபஹத் பாசிலின் ஜாலியான உரையாடலும் இடம்பெற்ற முழு வீடியோ இணைப்பில் இருக்கிறது.

"விளையாடுறீங்களா சார்.? - ஃபஹத் பாசில்" .. "விக்ரம் பாத்துட்டீங்களா.? - லோகேஷ்" .. வைரல் VIDEO CALL வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Fahadh Faasil and Lokesh first video call after vikram release

People looking for online information on Fahad Fazil, Fahadh Faasil, Lokesh Kanagaraj will find this news story useful.