www.garudabazaar.com

சூர்யா - பாலா இணையும் புதிய படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியான கொலமாஸ் தலைப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

Suriya41 is titled as Vanangaan Bala Krithi Shetty

தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது  பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் மார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா      உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ அறிமுகமாகிறார். இவர் சூப்பர் சரண்யா, கோகோ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 2017ல் வேணுகோபாலின் சர்வோபரி பாலக்கரன் படத்தில் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவாவில் (2021) அல்போன்சாவாகவும், கோ கோவில் (2021) அஞ்சுவாகவும், சூப்பர் ஷரண்யாவில் (2022) சோனாவாகவும் நடித்து புகழ் பெற்றார்

Suriya41 is titled as Vanangaan Bala Krithi Shetty

இந்நிலையில் இன்று இயக்குனர் பாலாவின் 56வது பிறந்ந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் லுக் போஸ்டரும், தலைப்பும் வெளியாகி உள்ளது. படத்திற்கு வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது.

Suriya41 is titled as Vanangaan Bala Krithi Shetty

கன்னியாகுமரியில் 34 நாட்கள் நடந்த 1வது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அடுத்த 15 நாட்கள் ஷெட்யூல் விரிவான செட் வேலைகளுக்குப் பிறகு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநராக மாயப்பாண்டியும், எடிட்டராக  சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Suriya41 is titled as Vanangaan Bala Krithi Shetty

People looking for online information on வணங்கான், Bala, Suriya, Vanangaan will find this news story useful.