Maha others
Nadhi others
www.garudabazaar.com

தமிழ்ல சூரரைப் போற்று எப்படியோ அப்படி மலையாளத்துல இந்த படம்.. 4 தேசிய விருதுகளை அள்ளிய AK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறந்த திரைப்படங்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள்  டெல்லியில் மத்திய அரசு சார்பில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ayyappanum Koshiyum won 4 National Awards Like Sorarai Potru

தமிழ் சினிமாவில், சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

Ayyappanum Koshiyum won 4 National Awards Like Sorarai Potru

அறிமுக இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருந்த 'மண்டேலா' திரைப்படம், சிறந்த வசனம், சிறந்த அறிமுக இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.

வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் என மொத்தம் 3 தேசிய விருதுகளை, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்  வென்றுள்ளது.

இதேபோல் மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த சண்டை இயக்கத்துக்கான விருது இந்த படத்தில் பணியாற்றிய ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை ஐயப்பனும் கோஷியும் படத்தில் வரும் பாடலுக்காக நாட்டுப்புற கலைஞர் நஞ்சம்மா பெற்றுக் கொண்டார். அதே போல, சிறந்த துணை நடிகருக்கான விருது, இந்த படத்தில் ஐயப்பன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிஜு மேனனுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் சச்சிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ayyappanum Koshiyum won 4 National Awards Like Sorarai Potru

ஒரு 25 வயது இளைஞன் கும்மாட்டியின்‌ பொழுது ஒரு நபரை நெஞ்சுக்கூட்டை நெருக்கி கொலை செய்கிறான். இரவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டபபனாவில் இருந்து ஊட்டிக்கு பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடி வழியாக சினிமா சூட்டிஙகிற்கு காரில் செல்கிறார் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கோஷி குரியன் (பிருத்விராஜ்).Alcohol Free Zone ஆன அட்டப்பாடி சோதனை சாவடியில் போலிஸ் சோதனையில் காரினுள் மது பாட்டில்கள் இருப்பது போலிசாரால் கண்டறியப்படுகிறது.

அதில் ஏற்படும் கைகலப்பில் பிருத்விராஜ் போலிசாரை தாக்க, பதிலுக்கு ஐயப்பன் நாயர் (பிஜீ மேனன்) பிருத்விராஜை அடித்து விடுகிறார். பிருத்விராஜை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரிக்கப்படும் பொழுது, பிருத்விராஜின் மொபைலில் உள்ள Contact லிஸ்டில் முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, போலீஸ் ஐஜி, சினிமா இயக்குனர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பர்கள் உள்ளது. இதனால் போலிஸ் ஸ்டேஷன் முழுவதும் பதற்றமாகிறது. நிலைமையை உணர்ந்த பிஜீ மேனன் மேலதிகாரிக்கு தகவல் கொடுக்கிறார்.

Ayyappanum Koshiyum won 4 National Awards Like Sorarai Potru

பிரித்விராஜை சௌகரியமாக நடத்துமாறு மேலதிகாரி கூற, பிருத்விராஜை அழைத்து வந்து தன் அறையில் அமர வைத்து இயல்பாக பிருத்விராஜ் செய்த குற்றங்களை பற்றி விளக்க. பிருத்விராஜ் தன் தரப்பு சூழலை கூறுகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகு சரணடைய வாய்ப்பு தருமாறு பிஜீ மேனனிடம் கேட்கிறார்.

இதற்கு அனுமதி மறுக்கவே ஒரு கட்டத்தில் பிருத்விராஜ் தனக்கு உடல் நிலை சரியில்லை அதனால் மது அருந்த வேண்டும் என்கிறார். வேறு வழியின்றி பிஜீ மேனன் மது பாட்டில்களின் சீலை உடைத்து மதுவை கிளாசில் ஊற்றி பிருத்விராஜிக்கு கொடுக்கிறார். பிஜீ மேனன் மது ஊற்றும் போது அதை தனது செல் போனில் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுக்கிறார்.

பின் மறுநாள் நீதிமன்றததால் பிருத்விராஜ் பாலக்காடு சிறைக்கு மாற்றப்படுகிறார். சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து தான் எடுத்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்கிறார்.இதன் காரணமாக பிஜீ மேனன் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுகிறார். இதன் விளைவாக ஏற்படும் தொடர் மோதல்கள் தான் படம். மூன்று மணிநேரம் இந்த படம் படம் ஓடும்.

Ayyappanum Koshiyum won 4 National Awards Like Sorarai Potru

படத்தின் திரைக்கதை இரண்டு மனிதர்களின்  மோதலை‌ வைத்து எழுதப்பட்டு இருந்தாலும் ஒரு சம்பவம் அதன் காரணமாக நடக்கும் சங்கிலித் தொடர் சம்பவங்கள் தான் திரைக்கதை.இரண்டு பேர் பக்கமும் நியாயமான காரணங்கள் இருப்பதாகவே படத்தில் காட்டப்படுகிறது.

பிரித்விராஜ் - காங்கிரஸ்காரராகவும், பிஜீ மேனன் - கம்யூனிஸ்டாகவும், பிஜீ மேனன் மனைவி - முன்னாள் மாவோயிஸ்டாகவும் இயக்குனர் படத்தில் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ayyappanum Koshiyum won 4 National Awards Like Sorarai Potru

People looking for online information on Ayyappanum Koshiyum, National awards, National Film Awards, Soorarai Potru will find this news story useful.