Kaateri logo top
www.garudabazaar.com

கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக ரஜினி? வைரலாகும் லோகேஷ் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Lokesh Kanagaraj about Film with Rajinikanth and Kamal Haasan

Also Read | நடிகர் அஜித்குமாருடன் ஒரு படம்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன அருமையான தகவல்!

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

Lokesh Kanagaraj about Film with Rajinikanth and Kamal Haasan

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது.

Lokesh Kanagaraj about Film with Rajinikanth and Kamal Haasan

இந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

ஒடிடியில் வெளியான பின்னும் இந்த  படம் வெற்றிகரமாக இன்னும் நகர்ப்புறத்தில் உள்ள சில திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

இந்நிலையில் சென்னையில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா  நடைபெற்றது.

Lokesh Kanagaraj about Film with Rajinikanth and Kamal Haasan

இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில்,"கமல்ஹாசன் தயாரிப்பில் ஹீரோவாக ரஜினி நடிக்க நீங்கள் ஒரு படம் இயக்குவீர்களா?" என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "அது அவ்வளவு எளிதில் நடக்கும் விஷயமல்ல அது. அப்படி நடந்தால் சந்தோஷம் தான்" என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

Also Read | ஒரு நாள் முன்கூட்டி ஆகஸ்ட் 11 அன்றே அமெரிக்காவில் ரிலீஸாகும் 'விருமன்'.. வெளியான OFFICIAL தகவல்!

கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக ரஜினி? வைரலாகும் லோகேஷ் பேட்டி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj about Film with Rajinikanth and Kamal Haasan

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Rajinikanth will find this news story useful.