Fakir Other Banner USA

“நீங்க யாரு பையன்னு தெரியும்ல..!”- வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பர்த்டே விஷ்! யாருக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய பிறந்தநாள் வாழ்த்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Super Star Rajinikanth's cute Birthday wish video for Santhosh Sivan son Apu goes viral

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த 1991-ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘தளபதி’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்தோஷ் சிவனின் மகன் அப்புவின் பிறந்தநாளையொட்டி, வீடியோ சேட் மூலம் ரஜினிகாந்த் வாழ்த்துக் கூறியுள்ளார். அந்த வீடியோவில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பு. இப்போ நீ டீன் ஏஜில் இருக்க. வாழ்க்கைய என்ஜாய் பண்ணு. அதேபோல படிப்பையும் என்ஜாய் பண்ணு. நீ யார் மகன்னு உனக்கு தெரியும். கவனமா இரு. உலகம் உன்ன பார்த்துட்டு இருக்கு..’ என்ற தனது அக்மார்க் மெஜஸ்டிக் சிரிப்புடன் வாழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ஏகப்பட்ட லைக்ஸ்களை குவித்து வருகிறது.