சுந்தர்.சி நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ‘ஓ வரியா’ பாடல் வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 05, 2019 11:25 AM
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா உள்ளிட்டோர் நடித்து கடந்த மாதம் வெளியான படம் 'ஆக்சன்'. டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து சுந்தர்.சி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'இருட்டு'. இந்த படத்தை 'முகவரி', 'தொட்டி ஜெயா' படங்களின் இயக்குநர் வி.இஸட்.துரை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுந்தர்.சி உடன் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவும், ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.இந்நிலையில் படத்தில் இருந்து ஓ வரியா என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. நாளை (டிசம்பர்-6) இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
சுந்தர்.சி நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ‘ஓ வரியா’ பாடல் வீடியோ! வீடியோ
Tags : Sundar.C, Yogi Babu, Dhorai V.Z, Iruttu