விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் படம்! பிரபல சேனலின் 'மாஸ்டர்'ப்ளான் இதுதான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

Sun tv acquires Sivakarthikeyan's Doctor satellite rights

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். இத்திரைப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்க, ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கலையரசன், வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மருத்துவ துறையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இது குறித்த அறிவிப்பு, சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor