ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தில் இருந்து புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான திரைப்படம் கனா. நடிகரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அருண்ராஜா காமராஜ் இத்திரைப்படத்தை இயக்கினார். ஐஷ்வர்யா ராஜேஷ் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கிராமத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் விளையாடும் கனவுடன் இருக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம், அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை குவித்ததோடு, பாக்ஸ் ஆபிசிலும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் கனா படத்தில் இருந்து, இதுவரை வெளிவராத போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளன. கலர்ஃபுல்லாக வடிவமைக்கப்பட்ட படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. தர்பார், காலா, கபாலி உள்ளிட்ட படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்த வின்சி ராஜ் டிசைன் செய்த இப்போஸ்டரை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.