சூப்பர் ஸ்டாரோட 'தலைவர் 168' பட பூஜை வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

Sun Pictures released Superstar Rajinikanth's Thalaivar 168 Pooja Video

இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதனையடுத்து ரஜினிகாந்த், சிவா இயக்கத்தில் 'தலைவர் 168' படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று (டிசம்பர் 11) பிரம்மாண்டமாக நடைபெற்றது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து தற்போது பூஜை வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.