நடிகர் சதிஷிற்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த கல்யாண பரிசு - தலைவர் 168 அப்டேட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 11, 2019 05:07 PM
'பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தினை ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சூரி, பிரகாஷ்ராஜ், மீனா, குஷ்பு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
.@actorsathish joins the cast of #Thalaivar168 .
Congratulations @actorsathish on your wedding today and our best wishes to the newly married couple!
@rajinikanth @directorsiva pic.twitter.com/Dbnn7Oniaz
— Sun Pictures (@sunpictures) December 11, 2019